

‘எழுத்து ஒரு சொத்தா?’ கட்டுரையில், ஒரு எழுத்தாளரின் உள்ளக் குமுறல் வெளிப்பட்டுள்ளது. சுந்தர ராமசாமி குறிப்பிட்டுள்ளதுபோல் எழுத்து, சமூகத்தில் பெரிய மரியாதையை ஈட்டித்தருவதில்லை.
நான் ஒரு மருத்துவர், பொறியாளர், நீதிபதி, தொழிலதிபர் இப்படியாகச் சொல்லிக்கொள்ள முன்வரும் நாம் 'நான் ஒரு எழுத்தாளர்; எம் தொழில் எழுதுவது' என்று சொல்லிக்கொள்ள வருவதில்லை. எழுதி பணம் சேர்க்க முடியாததே இதற்கு முக்கியக் காரணம்.
எழுத்தாளர் நிரந்தர வருமானம் பெறுபவராக இருந்தால்தான் குடும்பத்தின் ஏச்சுப்பேச்சுக்களிலிருந்துகூடத் தப்பிக்க முடியும். ஆக, குடும்பம், சமுதாயம் ஆகியவற்றிலிருந்து கிடைக்க வேண்டிய மரியாதையைப் பெற முடியாத ஒரு எழுத்தாளர் அவர் எழுதிய படைப்புகளில் காப்புரிமையை மட்டும் எப்படிப் பெற முடியும்?
கேரளத்தில், விஜயதசமி அன்று ஒரு குழந்தையின் கை பிடித்து அட்சரம் எழுதச் சொல்லிக்கொடுப்பதே ஓர் எழுத்தாளர்தான்.அந்த மாநிலத்தில் எழுத்தாளருக்கு அவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள். மலையாளத்தில் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் திரைப்படமாக வரும்போதெல்லாம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. இந்த நிலை தமிழ்நாட்டில் உண்டா?
- கேசவ்பல்ராம்,திருவள்ளூர்.