

நடப்பு நிதியாண்டில் மருத்துவ மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கான ஒதுக்கீட்டினை மத்தியில் ஆளும் பாஜக அரசு 20% வரை குறைத்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியானது.
ஏற்கெனவே, உலக நாடுகளை ஒப்பிடும்போது, மருத்துவ மற்றும் சுகாதார நலனுக்காக குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யும் நாடான இந்தியாவில் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% மட்டுமே) இவ்வாறான நடவடிக்கைகள், தவிர்க்கக்கூடிய நோய்களை எதிர்கொள்ளத்தக்க கட்டமைப்பைக்கூட வலுவிழக்கச் செய்துவிடும்.
நடப்பு நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க எடுக்கப்பட்ட முடிவு இது என்று சொல்லப்படுவது, மனித வளத்தின் தரத்தைப் பற்றிய அக்கறையின்மையையே இது காட்டுகிறது.
ஊரகப் பகுதிகளில் செயல்பட்டுவரும் பொது மருத்துவமனைகளின் செயல்பாட்டைப் பின்னுக்குத் தள்ளும் ஒரு நடவடிக்கையாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. பாதிக்கப்படப்போவது நிச்சயம் சாமானியர்கள் என்பதில் ஐயமில்லை.
- முனைவர் சீ. ஜானகிராமன்,கும்பகோணம்