

ஆதார் அட்டை விவகாரத்தில் மக்கள் வெகுவாக அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
எப்போதோ எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் ரசீதுகளை இப்போது கேட்கிறார்கள். இல்லையென்றால், புதிதாகப் படிவம் கொடுத்துப் பூர்த்திசெய்து தரும்படி கூறுகிறார்கள்.
புகைப்படம் எடுக்க எஸ்.எம்.எஸ். அனுப்புவோம் என்கிறார்கள். எஸ்.எம்.எஸ். வரவில்லையென்று கேட்டால், சரியான பதில் சொல்வதில்லை. ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று சொன்ன பாஜக அரசு, இப்போது அது கட்டாயம் என்கிறது. நீதிமன்றம் ஆதார் அட்டை தேவையில்லை என்று கூறிய பிறகும் இவர்கள் அதில் பிடிவாதமாக இருப்பது ஏன் என்றே தெரியவில்லை.
- பாலகிருஷ்ணன்,‘தி இந்து’ இணையதளத்தில்…