புத்தகங்களை மதிக்க வேண்டும்

புத்தகங்களை மதிக்க வேண்டும்
Updated on
1 min read

‘புத்தகங்களை இலவசமாக ‘விற்றால் என்ன?’ என்கிற கட்டுரை சரியான சாட்டையடி. இன்னும் நூலக ஆணைகள் ஃபாரம் கணக்கில்தான் தரப்படுகின்றனவே தவிர, எழுத்தாளரின் தரம், எழுத்தின் சிறப்பு, புத்தக உருவாக்கம் போன்றவற்றைப் பார்த்துக் கொடுக்கப்படுவதில்லை.

யார் எழுதிய புத்தகமாக இருந்தாலும், ஒரு ஃபாரத்துக்கு ரூ. 4 என்பது போலத்தான் கணக்கிடுகிறார்கள். புத்தகம் என்பது காகிதமும் அச்சு மையும் மட்டும் கலந்ததல்ல என்பதை வாசகர்களும் அரசும் புரிந்துகொள்ள வேண்டும். புத்தகங்களுக்கு அரசாங்கம் என்றைக்கு மரியாதை கொடுக்கத் தொடங்குகிறதோ அன்றைக்குத்தான் மக்களும் மரியாதை கொடுப்பார்கள்.

- வீரநாதன்,‘தி இந்து’ இணையதளத்தில்…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in