

நிலத்தில் உள்ளவர்கள் கடலைத் தங்கள் குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்திவந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய தலையங்கம் பல உண்மைகளைச் சொல்லியிருக்கிறது.
ஊருக்குள் கடல் நீர் புகுந்தபோது சேறும் சகதியும் கலந்திருந்தது. ஆனால் அதைவிட அதிர்ச்சியான விஷயம் டன் கணக்கான பிளாஸ்டிக் பைகள் அத்துடன் கலந்து வந்ததுதான். கடல் விழுங்கிய அத்தனை டன் கணக்கான பிளாஸ்டிக் பைகளும் செரிமானம் ஆகாததால் கடலால் துப்பப்பட்டுவிட்டது.
சுனாமி நிவாரண நிதியில் நிறுவனங்கள் லாபம் பார்த்தது மறுக்க முடியாத உண்மை. அதேபோல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரண உதவிகள் பத்தாண்டுகள் கழிந்த பின்னரும் இன்னும் அவர்களுக்கு போய்ச்சேரவில்லை எனும் செய்தி வேதனையளிக்கிறது.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.