

‘பூரண மதுவிலக்குபற்றி ஏன் பரிசீலிக்கக் கூடாது?’ என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதைப் படித்ததும் மனம் ஆனந்தக் கூத்தாடியது.
குடிமக்களை வாழ வைப்பதற்குத்தான் அரசு. ஆனால் அந்த அரசே வருவாயைக் காரணம் காட்டி, மக்களை வாழவைக்கத் தவறியதை எந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது என்று தெரியவில்லை.
பூரண மதுவிலக்கை மக்கள் மட்டுமல்லாது நீதிமன்றமும் ஆதரிக்க, ‘தி இந்து’வில் வெளியாகும் ‘மெல்லத் தமிழன் இனி...!’ தொடரும் முக்கியக் காரணம். மணியோசை கேட்டுவிட்டது. பின்னாலேயே யானை வரும் என்று நம்பலாம். நாட்டுக்கு மதுவிலிருந்து சுதந்திரம் கிடைக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அது இரண்டாவது சுதந்திர தினமாக இருக்கட்டும்.
ஜே. லூர்து,மதுரை.