

வைகோ எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் இலங்கைத் தமிழர் பிரச்னையை மனதில் வைத்தே சேருவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரால் இலங்கை விவகாரத்தில் ஒன்றுமே செய்ய முடியாது என்பதும் நிதர்சனம். இத்தனைக்கும் இலங்கை இறுதிப் போர் சமயத்திலும் அதற்குப் பின்னரும்கூடப் பலமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் வைகோவுக்கு மிஞ்சியது தோல்விதான்.
- ராமலிங்கம்,‘தி இந்து’ இணையதளத்தில்…
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வைகோ விலகியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. முற்றிலும் வேறுபட்ட கொள்கை கொண்ட இரண்டு கட்சிகள், ஒரே கூட்டணிக்குள் நீண்ட நாட்கள் இருக்க முடியாது.
தமிழகத்தில் கட்சியை நிலைபெறச் செய்யும் முனைப்புடன் இருக்கும் பாஜக, ‘தமிழ்’, ‘தமிழர்கள்’, ‘தமிழக மீனவர்கள்’ என்று திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த விவகாரங்களைக் கைப்பற்றத் தொடங்கிவிட்டது. இதனால், தங்கள் கட்சி அடையாளம் காணாமல் போய்விடும் என்ற அச்சம் கூட மதிமுக தலைமைக்கு வந்திருக்கலாம்.
இந்த விஷயத்தில் மக்களுக்கு இருக்கும் சந்தேகம் இதுதான் - பாஜகவின் அடிப்படைக் கொள்கைகள் என்னவென்று, கூட்டணியில் சேரும்போது வைகோவுக்குத் தெரியாதா?
- சே. ரங்கநாதன்,
மின்னஞ்சல் வழியாக…