

‘மலர்கள் மீது ஆணையாக…’ கட்டுரையில், களந்தை பீர்முகம்மது எழுப்பியிருக்கும் விவாதங்களை மதவாதிகள் தொடர்ந்து முன்னெடுத்து யோசிக்கத் தொடங்கினாலே, சமாதான வாழ்வுக்கான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிடும்.
மாறாக, மதங்களையும் கடவுள்களையும் காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் போர்களும் வன்முறைகளும் மனிதச் சமூகத்தை அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும். அறம் சார்ந்த விவாதங்கள் இன்று கேலிக்குரியனவாகவும் சம்பிரதாயங்களாகவும் மாறிவிட்டன.
மதக்கோட்பாடுகளைக் காலத்துக்கேற்றவாறு திருத்தம் செய்வதுடன் அவற்றை மறுவாசிப்புச் செய்து மக்களிடம் மறைந்து போயுள்ள அறநெறிகளை மீட்டெடுக்கும் பொறுப்பு மதத் தலைவர்களிடம் இருக்கிறது.
- மருதம் செல்வா,‘தி இந்து’ இணையதளத்தில்…