ஹில்பர்ட்டும் மாமேதையே

ஹில்பர்ட்டும் மாமேதையே

Published on

'ராமானுஜன்: இந்தியக் கணிதத்தின் நியூட்டன்' என்ற கட்டுரையில், ஹார்டி ஹில்பர்ட்டுக்கு 80 மதிப்பெண்களும், ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்களும் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஹார்டி செய்த தவறு.

ஹில்பர்ட் ஒரு மாபெரும் கணித மேதை. ‘இயற்கணிதம்’ என்ற பாடப் பிரிவில் அவருடைய ‘ஜீரோ தியரம்’ இல்லாமல் ‘இயற்கணித வடிவவியல்’ என்ற பாடப் பிரிவை ஆரம்பிக்கவே முடியாது. இந்தப் பிரபஞ்சத்தை அறிய உதவும் ‘ஃபீல்டு சமன்பாட்டை’ ஐன்ஸ்டீன் தனது கற்பனாசக்தியின் மூலம் கண்டறிந்தார்.

அந்தச் சமன்பாட்டுக்கு ஹில்பர்ட் தனது ஞானத்தின் மூலம் கணித நிரூபணத்தைக் கொடுத்தார். இன்று ஹில்பர்ட்டை ஒதுக்கிவிட்டுக் கணிதம் பயில இயலாது. வறுமை அவரைச் சூழ்ந்த காலத்திலும் அவர் கணிதத்தை நேசித்தார். மற்றவர்கள் தனக்காகப் பணத்தைத் தேடி அலைந்த காலத்தில் அவர் மற்றவர்களுக்காகக் கணிதத்தைத் தேடி அலைந்தார். அந்த அளவுக்குக் கணிதத்தை நேசித்தவர் அவர்.

- பெ. தாதாபாய் நௌரோஜி,கணிதத் துறை, ம. சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in