

ரயில் பயணங்களில் கொள்ளையர்கள், குடிகாரர்களால் ஏற்படும் தொல்லைகள் ஒருபுறம் என்றால் நன்கு படித்தவர்கள், மதிப்பான பணியில் இருப்பவர்கள்கூட மற்ற பயணிகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் சீட்டு விளையாடிக்கொண்டும், சத்தமாக அரட்டை அடித்துக்கொண்டும் தாங்கள் வேலை பார்க்கும் ஊருக்குச் சென்றடையும் பிறருக்கு மிகவும் இடையூறு செய்கிறார்கள்.
குறுகிய நேரப் பயணத்தில் எதிர்கொண்டாலும் இதுவும் சகிக்கமுடியாதத் தொந்தரவுதான். தங்களுடன் பயணிக்கும் சகபயணிகளின் மனநிலையையும் இதுபோன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
- கே. சிராஜுதீன்,திருச்சி.