

மின்கட்டண உயர்வு குறித்த தமிழக அரசின் நடவடிக்கை நியாயமற்றது. ஆண்டுதோறும் உயர்ந்துவரும் மின் தேவையைச் சமாளிக்க அல்லது பூர்த்திசெய்ய போர்க்கால நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
உரிய உதவிகளை மத்திய அரசும் செய்து தர வேண்டும். அடுத்த ஆண்டுக்கான மின் தேவை 20% அதிகமாகும் என்பது அச்சத்தை மேலோங்கச் செய்கிறது.
தனியார் நிறுவனங்களிடமிருந்து மூன்று மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதாகத் தலையங்கத்தில் குறிப் பிட்டிருப்பது அதிர்ச்சி தந்தது. கடைசி யில் அனைத்து பாரங்களும் மக்களின் தலையில் இறங்க வேண்டுமா?
அருணா சுந்தரராசன்,மானாமதுரை.