

தங்கர்பச்சானின் ‘கண்கள் இழந்த தமிழன்’ கட்டுரை மனதைக் கனக்க வைத்தது. ‘கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்துவந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்' என்று தன் மனைவி செல்லம்மாளுக்குக் கடிதம் எழுதினார் பாரதி. அந்தத் தமிழே இன்று கவலைக்கிடமான நிலையில் இருப்பது தமிழர்களுக்கு நேர்ந்திருக்கும் மானக்கேடு. தாய்மொழியை உதறிவிட்டுத் திரியும் தமிழர்கள், தங்கள் கலாச்சாரம் வேட்டி அணிவதில் மட்டுமே இருப்பதாக நினைப்பதுதான் வேடிக்கை.
- எஸ்.எஸ். ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.