

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றிய ‘காவிய நாயகன் உருவான கதை’ கட்டுரை சிறப்பாக இருந்தது.
அவருக்காக உருவாக்கப்பட்ட காட்சிப் படிமங்களும் பாடல் வரிகளும் அவரது செல்வாக்கை அதிகரித்தது உண்மை. இத்தனைக்கும் எம்.ஜி.ஆர். காலத்தில், இன்றைக்கு இருப்பதுபோல ஊடக வெளிச்சம் இருக்கவில்லை.
எனினும், எம்.ஜி.ஆர். தேர்வுசெய்து நடித்த பாத்திரங்கள் அவருக்கு மிகப் பெரும் ரசிகர் வட்டாரத்தைத் தந்தன. அவரது அரசியல் வாழ்வில், மிகப் பெரிய வளர்ச்சிக்கு அஸ்திவாரமிட்டதும் அவருக்காக உருவாக்கப்பட்ட அந்தப் பாத்திரங்கள்தான்.
- வீ.சக்திவேல்,தே.கல்லுப்பட்டி