சாகித்ய அகாடமி முன்வர வேண்டும்

சாகித்ய அகாடமி முன்வர வேண்டும்
Updated on
1 min read

சாகித்ய அகாடமி குறித்து லக்ஷ்மி மணிவண்ணனின் பதிவு மிக முக்கியமானது. இதை யொட்டி என்னுடைய சில அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

வியாபாரியும் எழுத்தாளருமான நண்பர் ஒருவர், மொழிபெயர்ப்பதற்குத் தகுதியற்ற ஒரு நூலை என்னிடம் தந்து, இதை மொழியாக்கம் செய்து கொடுங்கள். இந்த வருட மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை உங்களுக்குப் பெற்றுத்தருகிறேன் என்றார். இது என்னை அவமானப்படுத்துவதுபோல் இருக்கவே, நான் மறுத்துவிட்டேன். பிறகு, இந்நூலை அவர் இன்னொருவர் மூலம் மொழிபெயர்த்தார்.

சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது. வியாபாரத் தந்திரங்கள் எதற்கெல்லாமோ பயன்படுகிறது. ஆதிவாசிகள் தொடர்பான ஒரு நாவலை மொழிபெயர்ப்பதற்கான அனுமதி கேட்டு, மூல நூலின் ஆசிரியரும் நானும் பலமுறை, சில வருடங்களாகக் கடிதம் மூலம் தொடர்பு கொண்டும் எந்தப் பதிலும் அளிக்காதவர்கள், அந்த நூலை ஆசிரியரின் அனுமதியுடன் நான் மொழிபெயர்த்து வெளியீட்டுத் தேதியையும் நிச்சயித்த பிறகு, குறிப்பிட்ட நூலை மொழிபெயர்த்துத் தருவதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குவதாக நாங்கள் முடிவுசெய்திருக்கிறோம் என்று தொலைபேசிமூலம் பெருந்தன்மையுடன் கேட்டுக்கொண்டனர். லக்ஷ்மி மணிவண்ணனின் பதிவை, வழக்கம்போல் ஒரு கட்டுரை என்று எடுத்துக்கொள்ளாமல், தங்களுடைய குறைபாடு களைக் களைய சாகித்ய அகாடமி முன்வர வேண்டும்.

- குளச்சல் மு.யூசுப்,மின்னஞ்சல் வழியாக…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in