

‘பெண் இன்று’ பகுதியில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருந்தாலும் துணிச்சலுடன் அதை எதிர்கொள்ளும் விஜயலட்சுமியின் பயணம் பாராட்டுக்குரியது.
மருந்துகளால் குணமாகும் நோய்களைவிட தன்னம்பிக்கையால் குணமாகும் நோய்களே அதிகம். காற்றில் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுடன்கூடப் பாகுபாடின்றிப் பழகுகிறோம்.
ஆனால் உணவு, உடை போன்றவற்றின் மூலம் எய்ட்ஸ் பரவாது என்று தெரிந்தாலும் இந்தச் சமூகம் அவர்களை அரவணைக்க மறுப்பது கொடுமை. ஆறுதலும் அரவணைப்பும் எந்த நோயையும் விரட்டி ஆயுளை நீட்டிக்கும்.
தன்னைப் போல எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நம்பிக்கை வெளிச்சம் தருகிற விஜயலட்சுமி நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறோம்.
- மு.க.இப்ராஹிம்,வேம்பார்.