

பாரதியைப் புதிய பரிமாணத்தில் அறிந்துகொள்ளும் பயணத்துக்கான வழியைக் காண்பித்து, நம்மைக் கூடவே அழைத்தும் செல்கிறது. மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்த கவிஞனாக பாரதியை அறிமுகப்படுத்துகிறார் ஆசை.
அனைத்து வாழ்க்கைச் சுமைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகும் பாரதியே இந்த பிரபஞ்ச ஒற்றுமையையும் விரும்புகிறார். மானுடப் பகைமைகளைத் தவிர்த்திடவும், எல்லோரிடத்தும் அன்பாய் இருந்திடவும், பாரதியின் வழிநின்று சொல்லும் பாங்குதான், இன்றைய உலகின் முக்கியத் தேவை.
- வி.ஞானசேகர்,புதுச்சேரி.
பிரபஞ்சத்தை ஈர்த்த கவிஞன்
ஆசை எழுதிய ‘பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்’ என்கிற கட்டுரை பாரதியின் முழு பரிமாணத்தை உணர்த்தியது. தனது காலத்தில் முறையாகப் போற்றப்படாத பாரதி, தனது எழுத்து மூலம் இன்றளவும் ஈர்க்கிறார் என்றால், இந்தப் பிரபஞ்சத்தின் சூட்சுமத்தை அறிந்துகொண்டு தனித்து நின்ற பிரபஞ்சத்தின் பாடகர் அவர் என்பதில் சந்தேகமில்லை. பாடல்களில் கனலைக் கக்கவும் தென்றலை உலவ விடவும் தெரிந்த பாரதி, நமக்கு ஞானியாகவும், பித்தனாகவும் தெரிவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்று பரிவுடன் சொன்னவர் அந்த மகாகவி. அவரைப் பற்றிய ஆழமான கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.