விவசாயிகளின் விடிவெள்ளி

விவசாயிகளின் விடிவெள்ளி
Updated on
1 min read

கோவை நாராயணசாமி நாயுடு பற்றிய கட்டுரை மிகச் சிறப்பு. இன்று இருக்கும் உழவர் இயக்கங்களுக்கு முன்னோடி அவர். 1968-ல் கோவையில் சிறிய அளவில் அவரால் தொடங்கப்பட்ட இயக்கம் படிப்படியாகத் தமிழகமெங்கும் கிளைகள் பரப்பியது.

உழவர்களுக்கான அடையாளமாகப் பச்சைத் துண்டு அணியும் பழக்கத்துக்கு அடித்தளமிட்டவர் கோவை நாராயணசாமிதான். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைப்பதே அவரது கனவு.

அதற்காக கர்நாடகத்தில் நஞ்சுண்டசாமியையும், ஆந்திராவில் சங்கர் ரெட்டியையும், உத்தரப் பிரதேசத்தில் மகேந்திர சிங்கையும் சந்தித்துப் பேசி, அந்த மாநிலங்களில் உழவர் இயக்கங்களை உருவாக்கினார்.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in