

‘கீதையைக் காப்பாற்றுங்கள்’ தலையங்கம் மிகச் சரியான கருத்துக்களைக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல்களில், ஆள்பவர்களே ஈடுபட முயல்வது நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், நடுநிலையான கருத்துகொண்ட மக்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட மதத்துக்குச் சொந்தமான விஷயங்களை அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானதாக அறிவிக்க முயல்வதை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும்.
- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.