

மார்கழித் திருவிழா இணைப்பில் வெளியான ‘இசையே தொழில்’ கட்டுரை மனதைத் தொட்டது.
தென்மாவட்டங்களில் அம்மன், சாமி கோயில் கொடை விழா இன்றளவும் பிரசித்தம். அதில் இளையோர், முதியோர் என பாகுபாடில்லாமல் ஈடுபாடு காட்டுவது நையாண்டி மேளத்திலும், கரகாட்டத்திலும்தான்.
மேளத்துக்கும் கரகத்துக்கும் முந்தைய ஆண்டே முன்தொகை கொடுக்கும் பழக்கம் அப்போது இருந்தது. கிட்டப்பா, சண்முகசுந்தரம், சம்பாரி போன்றவர்கள் இந்தத் துறையில் உச்சத்தில் இருந்தார்கள். இசை என்றால் கர்நாடக இசைதான் என்றில்லாமல் இதுபோன்ற கிராமப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் தரும் ‘தி இந்து’வுக்கு நன்றி.
- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.