

தேநீர்க் கோப்பை எடுத்துவரும் சிறுவனை, குழந்தையைச் சுமக்கும் சிறுமியை, உணவக மேஜை துடைக்கும் பாலகனை, நடைபாதையில் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்தும் பார்க்காததுபோல் பாவனை செய்துவிட்டு மனசாட்சி உறுத்தாமல் தப்பித்துக்கொள்கிறோம்.
இத்தகைய சாமர்த்தியத் தப்பித்தலைக் கேள்விக்குள்ளாக்கியது தலையங்கம். ஒரு தேசத்தின் வளர்ச்சியை நவீனமயம், தனியார்மயம், தாராளமயம், செல்வந்தர்களின் பட்டியல் மற்றும் ஜிடிபி போன்ற சமாச்சாரங்களைக் கொண்டு மட்டும் கணக்கிட முடியாது.
வரப்புயர கோல் உயரும் என்பதுபோல தேசத்தில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி இவற்றின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சியாகும்.
- பி.சந்தானகிருஷ்ணன்.தஞ்சாவூர்.