

கே.ராஜேஸ்வர், வண்ணநிலவனின் ருத்ரய்யா பற்றிய கட்டுரைகள் ஒரு அசாதாரணமான மனிதரின் அசாதாரணமான போராட்டங்களைக் கூறுவதாகவே அமைந்துள்ளது. ருத்ரய்யா பல படங்களை எடுக்க முயன்று தோல்வியடைந்திருந்தாலும், பணத்தில் ஈடுபாடு இல்லாமல் நல்ல படைப்பைத் தர வேண்டும் என்ற அவரது நெஞ்சுறுதி, அவரது தோல்விகளையெல்லாம் வெற்றியின் மறுபக்கமாகவே எண்ணவைக்கிறது.
அவர் எடுத்த முயற்சிகள் இக்கட்டுரைகளைப் படிப்பவர் மனதில் ‘முடிவு எப்படியிருந்தாலும் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும்' என்ற எழுச்சியை ஊட்டியுள்ளது. கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ் சினிமாவில் அவரது கனவு பொய்த்துவிட்டது என்ற கூற்றை ஏற்க முடியவில்லை. ‘அவள் அப்படித்தான்' இந்தக் கூற்றை நிராகரிக்கிறதல்லவா?!
- ஜே. லூர்து,மதுரை.