

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நவீன தகவல் தொடர்புச் சாதனமான ‘வாட்ஸ் அப்’ குழுவைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு அரசு உயர் அதிகாரியும் ‘வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர்’ போன்ற சமூக வலைத்தளத்தில் ஈடுபடுவது நடைமுறையில் மக்களிடம் உள்ள குறைகளையும் தேவைகளையும் நேரடியாக ஆராய்வதற்கு வசதியாக இருக்கும். காலத்துக்கு ஏற்றவாறு தன்னை நிலைநிறுத்திக்கொள்வதிலே மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
- கோ.தேவி,ஜோலார்பேட்டை.