

இந்தியாவில் ‘மும்மொழிக் கொள்கை’ என்ற திட்டம் தற்போதுள்ள காலகட்டத்தில் மிகவும் சரியானதுதான் என்று நினைக்கிறேன்.
தாய்மொழி அல்லது மாநில மொழிப் பாடம், தேசிய மொழியான இந்தி மற்றும் உலகப் பொதுமொழியான ஆங்கிலம் ஆகியவற்றினை மாணவர்கள் கற்கலாம். தற்போது சம்ஸ்கிருதம் கடவுள் வழிபாட்டு மொழியாகவே உள்ளது. புழக்கத்தில் இல்லாத சம்ஸ்கிருத மொழியினைத் திணிப்பது என்பது முறையாகாது. எனவே, தத்தம் மாநில மொழி, தேசிய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பினைப் பெற இந்தி மொழி மற்றும் பன்னாட்டு அளவில் சாதிக்க ஆங்கில மொழி என்ற மும்மொழிக் கோட்பாடு என்பது சரியாக இருக்கும்.
- எம். ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.