

‘மெல்லத் தமிழன் இனி…’ தொடர் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பங்களிப்புதான் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும். ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக மது எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், மாநில அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அரசாங்கத்தின் கவனம் திரும்பும். மது தீமை என்று தெரியும். ஆனாலும் அதன் தீவிரம் இந்தத் தொடரைப் படிக்கும்போது நம்மைப் பெரிய அளவில் அதிரவைக்கிறது. மது என்ற எண்ணமே அதன் மீது மிரட்சிகொள்ள வைக்கிறது. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் அத்துடன் நிறுத்தி மீள்வது நல்லது. இல்லையேல் அவர்கள் அழிந்தொழிவது மட்டுமல்ல, அவர்களை நம்பியவர்களையும் அழித்துவிடுவார்கள்.
- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி.