

நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதன்மூலம் அவை சிறப்பாகவும் லாபகரமாகவும் செயல்படும் என்று, நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தைக் கையில் கொண்ட அரசு, தன் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது.
தனியார் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் சிறந்து விளங்குவதற்குக் காரணம், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அதிகாரிகளை வேலை வாங்கும் திறன் ஆகிவையே. மத்திய அரசின் கீழ் வரும் பொதுத்துறை நிறுவன இயக்குநர்களின் மெத்தனப் போக்கு, ஊழியர்களின் திறன் தொய்வு, மற்றும் விற்பனையில் ஊழல் போன்றவையும் நஷ்டத்துக்குக் காரணம். ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு நேர்ந்துவிடவே இத்தகைய திட்டங்களை மேற்கொள்வதாகக் கருதவேண்டியுள்ளது.
- இல. ஜெகதீஷ்,கிருஷ்ணகிரி.