

ஃபேஸ்புக் அதிகமாகப் பயன்படுத்தும் இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு மிகவும் தேவையான நல்லதொரு பதிவு, ‘பகிர்ந்துகொள்ளுதல் எனும் பொறுப்பு' என்கிற கட்டுரை. நண்பர்களிடம் செய்திகளை விரைவாகப் பரப்ப உதவும் இந்த இணையத்தில், செய்திகளின் உறுதித்தன்மையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஃபேஸ்புக்கின் வீச்சைப் பயன்படுத்திக்கொண்டு, எல்லா ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் எல்லாவிதமான செய்திகளையும் வெளியிட்டு, இன்றைய இளைஞர் சமுதாயத்தை வெகுவாகக் கவர்கின்றன என்பதும், அந்த மயக்கத்திலேயே அப்பக்கத்தில் வரும் எல்லாச் செய்திகளும் முழுமையாக இருக்கும் என்ற எண்ணத்தில் பகிர்ந்துகொள்ளுதல்தான் இன்றுவரை நிகழ்கிறது.
- பி. நடராஜன்,மேட்டூர்அணை.