அழியா ஓவியம்

அழியா ஓவியம்
Updated on
1 min read

‘காலத்தின் தூசி படிந்த புகைப்படங்கள்!’ என்ற கிராமஃபோன் பகுதியின் நினைவலைகளின் கட்டுரை அருமை. கடந்த 30 வருடங்கள் வரை தவழும் வயதிலுள்ள குழந்தைகளை வெறும் உள்ளாடையுடன் குப்புறப் படுக்கவைத்து, ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட கருப்பு - வெள்ளைப் புகைப்படங்களால் எல்லோர் வீட்டின் முன் அறைகளும் நிறைந்திருக்கும்.

என் அண்ணனின் திருமணத்தின்போது அவனின் சிறுவயதுப் புகைப்படத்தைப் பெரிதாக்கி, மணப்பெண்ணிடம் பரிசாக நாங்கள் கொடுத்ததும், அவர்கள் வெட்கத்துடன் அதைப் பார்த்ததும், இன்றும் எங்கள் மனதில் அழியா ஓவியம். உறவுகளை நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தக்கூடிய இதுபோன்ற புகைப்படக் காட்சிகள் இப்போது யாருடைய வீட்டிலும் இல்லை என்பதுதான் வேதனைக்குரியது. உறவுகளுடன் அவர்களின் நினைவுகளையும் நாம் தொலைத்துவிட்டோம்.

- பி. ஆறுமுகநயினார்,தச்சநல்லூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in