

சிகரெட்டால் கிடைக்கும் வரி வருமானத்தைப் பெறும்போது லாபம் ஈட்டும் வியாபாரியாகவும், அதன் பின்விளைவாய் உபயோகிப்பாளர்கள் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும்போது, சமூக ஆர்வலருமாகவும் இரட்டைநிலை எடுக்கிறது அரசு. எனினும் புகைப்பழக்கத்தால் இழப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில், ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட எதையாவது செய்வது என்பது ஒரு நல்ல ஆரம்பம் என்றும் கொள்ளலாம். நல்ல விஷயம் எப்படி நடந்தாலும் நல்லதுதான். ஏனென்றால், புகையிலை அதன் அனைத்து வடிவங்களிலும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று.
- பி.சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.