

‘வெற்றிக் கொடி’ இணைப்பிதழில் ‘வாழ்க்கையைக் காதலியுங்கள்’ என்ற வாழ்க்கைபற்றிய விளக்கம், இன்றைய இயந்திர வாழ்க்கை வாழ்பவர்களை அதிலிருந்து வெளியே வாருங்கள் என்று மென்மையாக கைபிடித்து அழைத்துச் செல்வதுபோல் ஆதுரமாக இருந்தது. வாழ்க்கையை நேசிப்பவர்களால் மட்டும்தான் நிம்மதியாகவும், அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியும் எனத் தெளிவாக உணரவைத்ததற்கு பெரும் நன்றி!
- உஷாமுத்துராமன், திருநகர்.