

புட்டபர்த்தியில் ஆஸ்திரேலியப் பெண் படுகொலை செய்யப்பட்ட செய்தி கவலை தருகிறது. வளர்ந்த நாடுகளிலிருந்து இந்திய மடங்களை நோக்கி மக்கள் வருவதற்குக் காரணம், மன அமைதிக்காகவும் கலாச்சாரத்தின் மீதுள்ள ஈர்ப்பினாலும்தான். இந்தியா ஆன்மிகத்தில் முழுமையடைந்த நாடு என உலகத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிய பெருமை சுவாமி விவேகானந்தருக்கு உண்டு. அவர் போட்ட பாதையைப் பலரும் பயன்படுத்திவருகிற வேளையில், ஓர் அயல்நாட்டு மூதாட்டி 20 ஆயிரம் ரூபாய் பணத்துக்காகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிற நிலையில், ‘மடங்கள் தங்கள் ஆன்மிகப் பயணத்தில் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தில் பின் தங்கியிருக்கிறதா?’ என்று நமக்குத் தோன்றும் ஐயத்தைத் தவிர்க்க முடியவில்லை.
- கி. நாவுக்கரசன்,ராணிப்பேட்டை.