தெய்ய தெய்ய தெய்யா தெய்யா...

தெய்ய தெய்ய தெய்யா தெய்யா...
Updated on
1 min read

கேரளாவில் இன்றும் புகழ்பெற்றிருக்கும் தெய்யனாட்டம் அன்றைய தமிழரின் வேலன் வெறியாட்டமே என அ.கா. பெருமாள் சொல்கிறார்; அது முழு உண்மை. தெய்யனாட்டத்தைத் தெய்யாட்டம் எனவும் சொல்வர். தெய்யம் என்றால் தெய்வம்.

ஒரு குறிப்பிட்ட குலப் பிரிவைச் சார்ந்த ஆண்களே தெய்ய வடிவமிட்டு ஆடி வருவர். ஒரு குறிப்பிட்ட இனக் குழுவுக்கு ஆதியில் பெருமை சேர்த்த வீரனின் வழித்தோன்றல்களைத் தெய்வமாகக் கருதும் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.

வேலன் வெறியாடலில், வேலன் முருகனை அழைத்துவரும் பூசாரியாக இருப்பான். அதைப் போன்றே தெய்யனாட்டத்தில் தெய்யக்காரன். மிகுந்த வண்ணமயமான நிகழ்வாக கேரளாவில் கொண்டாடப்படும் அவ்வாட்டத்தில், தெய்ய வடிவமேற்பவர்கள் அசாதாரணச் செயல்களை மேற்கொள்வதாக மக்கள் நம்புகின்றனர். தெய்யக்காரன் தெய்யமாய் மாற மூன்று சடங்குகள் முக்கியமானவையாகச் சொல்லப்படுகின்றன.

அவை தோற்றமிடரல் அல்லது தோட்டமிடரல், முகக்குறி எழுதுதல் மற்றும் கண்ணாடி நோக்கு. தோற்றமிடரல் சடங்கில் தெய்யத்தின் முடியும், தெய்யத்தின் சக்தியைக் கொண்டதாக நம்பப்படும் கொடியிலாவும் தெய்யக்காரனிடம் தரப்படுகின்றன.

முகக்குறிச் சடங்கில் தெய்ய வடிவம் வண்ணச் சாந்துகளால் அவன் முகத்தில் வரையப்படும். கண்ணாடி நோக்குச் சடங்கில் தன் முகத்தைப் பார்க்கும் தெய்யக்காரன் தெய்யத்தின் ஆயுதங்களை அர்ச்சகரிடமிருந்து பெற்று ஆட்டத்தைத் தொடங்குவான். கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ திரைப்படத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட முகமூடி போன்ற முகம் தெய்யனுடையதே.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in