

மனதை நெருடும் விதத்தில் எபோலா நோய்ச் செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அதன் பாதிப்பை உலகுக்கு உணர்த்தி அரசாங்கத்தை எச்சரிக்கும் விதத்தில் ‘தி இந்து’ நாளிதழ் செய்திகளும் கட்டுரைகளும் வெளியிடுமளவுக்கு வேறு எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் செய்திகளும் கட்டுரைகளும் வரவில்லை. ‘என்ன நினைக்கிறது உலகம்?’ பகுதியில் கன்கார்ட் டைம்ஸ் பத்திரிகை, சியாரா லியோனில் நோய் தாக்கம் காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டது குறித்து வெளியிட்ட செய்தியும், ‘எப்படியெல்லாம் அழிக்கிறது இந்த எபோலா?’ என்கிற கடைசிப் பக்கக் கட்டுரையும் ஏழைகளைப் பெரும்பான்மை மக்களாகக் கொண்ட நமது இந்திய தேசத்தில் எபோலா நுழைந்தால் என்னாவது என்கிற கேள்வியைக் கேட்கத் தூண்டுகின்றன.
- தனசேகரன்,அய்யன்பேட்டை.