

கோவை மற்றும் தேனி மாவட்ட திராட்சை விவசாயிகள், ஏனோ தெரியவில்லை மிகவும் கவனக் குறைவாகவே உள்ளனர். விஜயனின் கூற்றிலிருந்து நான் மாறுபடுகிறேன். மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி மாவட்ட விவசாய மக்களின் முழு நேர உழைப்பு திராட்சை விவசாயம்தான். மிகவும் நம்பிக்கையுடனும் கூட்டு முயற்சியாகவும் திராட்சையை உரிய மதிப்புக்கூட்டு செய்து, கோடி கோடியாகச் சம்பாதிக்கின்றனர்.
அதே திராட்சை மதிப்புக்கூட்டுப் பணிக்கு, தேனியில் குளிர்சாதன அறை கட்டி, பயன்படுத்துவோரில்லாமல் கிடக்கிறது. முதலில் விஜயனுடன், கோவை திராட்சை விவசாயிகள் 10 பேரையும் தேனி விவசாயிகள் 10 பேரையும் சாங்கிலி மாவட்டத்துக்குச் சென்று நேரில் பார்த்து வரச் சொல்லுங்கள். அதே பாணியில் இங்கு செய்தால்போதும், ஒவ்வொரு திராட்சை விவசாயியும் கோடீஸ்வரர்தான்.
- உ. காஜாமைதீன்,செயலர், தென்னக மானாவாரி விவசாய சங்கம், எட்டையபுரம்.