

‘வ.உ.சி: கப்பலோட்டிய இந்தியர்’ கட்டுரை படித்தேன். நாட்டின் விடுதலைக்கும் தமிழ்ப் பணிக்கும் அரும்பாடுபட்ட, வ.உ.சிதம்பரம் பிள்ளை, வர்க்கப் போராட்டத்துக்கும் தலைமை தாங்கினார் என்ற செய்தி, கட்டுரையில் விடுபட்டுள்ளது.
தூத்துக்குடி ஆர்.வி. மில்லின் (தற்போதைய மதுரா கோட்ஸ்) தொழிலாளர் கொத்தடிமை முறைக்கு எதிராகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்துப் போராடிய பெருமை வ.உ.சி-யையே சாரும். இதனைச் சமூக ஆராய்ச்சி எழுத்தாளர் ஆ. சிவசுப்பிரமணியம் தன்னுடைய ‘வ.உ.சி-யும் - வர்க்கப் போராட்டமும்' என்ற நூலில் தெளிவாகக் குறிபிட்டுள்ளார்.
வ.உ.சி-க்கு அப்போதைய காங்கிரஸ் அரசு சிலை வைக்க நிதி உதவி செய்ய மறுத்தாலும், பின்னர் வந்த காங்கிரஸ் அரசு, வ.உ.சி-க்கு தூத்துக்குடி துறைமுக வாயிலில் சிலை வைத்ததோடு, தூத்துக்குடி துறைமுகத்துக்கு ‘வ.உ. சிதம்பரனார் துறைமுகம்’ எனப் பெயர் சூட்டி, அப்பெருமகனாருக்குச் சிறப்பு செய்ததை நாம் நினைவுகூர வேண்டும்.
- ப. சுகுமார்,தூத்துக்குடி.