

தலையங்கத்தில் வெளியான மூன்றாவது அணியைப் பற்றிய கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது. அதில் இருக்கும் தலைவர்கள் ஒருவர்கூடக் கறைபடியாதவர் என்று கூற முடியாது. இப்போது இவர்கள் அனைவரும் மோடியை எதிர்ப்பதற்கு மட்டுமே ஒன்று சேர்ந்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த அணி பிஹார் மாநிலத்தில் மட்டுமாவது தாக்குப்பிடிக்க முடியுமானால் நல்லது. இந்தியா முழுவதும் செல்வாக்கு பெறுவது கடினம். மேலும், மாயாவதி ஒருபோதும் இவர்களோடு சேர மாட்டார். இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழகமும் சேராது. எதிர் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அணி காணாமல் போய்விடும் என்றே தெரிகிறது.
- அப்துல் ரஹீம்,காரைக்குடி.