

மழைக் காலம் வருவதற்குமுன் அரசு ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டிய கடமையைச் செய்யத் தவறியது மக்களின் துரதிர்ஷ்டம். அரசே குளங்களை, ஏரிகளை பேருந்து நிலையம் மற்றும் சில வியாபாரிகளுக்குக் குத்தகைக்கு விட்டுள்ளது கவலை அளிக்கும் செய்தி. அதிமுக அரசு கடந்த ஆட்சிக் காலத்தில் நல்ல முறையில் செயல்படுத்திய மழை நீர் அறுவடைத் திட்டம் மிகவும் பாராட்டுக்கு உரியது. ஆனால், இந்த அரசே அதனை ஓரங்கட்டியுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்சியது போல் உள்ளது.
நீங்கள் இரண்டொரு மாதங்களுக்கு முன் அரசே குளங்கள் மற்றும் ஏரிகளைக் கையகப்படுத்தியதுபற்றி ஒரு தலையங்கம் எழுதியது இந்த நேரத்தில் நினைவில் கொள்ளத் தக்கது.
- இரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.