

வங்கிக் கணக்கு இல்லாவிட்டால் காஸ் மானியம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தி பதற்றத்தைத் தருகிறது.
மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல. ‘கையில் காசு வாயில் தோசை' என மானிய விலையில் விற்பதை விட்டுவிட்டு, அரசுக்கு ஏன் இந்த வீண் வேலை? முந்தைய காங்கிரஸ் அரசு இதே திட்டத்தைக் கொண்டுவந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்த பா.ஜ.க. இப்போது நடைமுறைப் படுத்துவது ஏன்? இந்தத் திட்டத்தினால் நுகர்வோருக்கும் தொல்லை - ஏனென்றால் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியதிருக்கிறது; வங்கிகளுக்கும், சிலிண்டர் விநியோக ஏஜன்சிகளுக்கும் அதிகப் படியான வேலைப் பளு வேறு. எனவே, காஸ் சிலிண்டர் விநியோகம், மானிய விலையிலேயே தொடரவேண்டும்.
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.