

‘மோடி ஆட்சியில் வளர்ச்சி யாருக்கு?’ கட்டுரையில் யதார்த்தத்தைக் காணோம். 1990 வரையில் நாம் கலப்புப் பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடித்துவந்தோம். அதனால், எந்த திக்கை நோக்கிப் பயணம் என்பது கேள்விக்குறியானது. சோஷலிஸ சித்தாந்தத்தைக் கடைப்பிடித்த சீனா, நமக்கு முன்னால் அதிலிருந்து விலகி, சந்தைப் பொருளாதாரத்தைக் கடைப்பிடித்து இன்று வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
சோஷலிஸப் பாதையில் பயணித்த ரஷ்யாவின் நிலை நமக்குக் கண்கூடாகத் தெரிகிறது. 1990-க்கு முன்னால் எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் திண்டாடிய படித்த மக்களில் நானும் ஒருவன். ஆனால், இன்றைக்கு வாய்ப்புகள் அதிகம். சோஷலிஸப் பாதையில் சிவப்பு நாடா முறை, அதிகாரவர்க்கத்தின் தலையீடு, தொழிலாளர் பொறுப்பின்மை, அரசியல்வாதியின் குறுக்கீடு ஆகிய தடங்கல்கள் உண்டு.
- வெங்கட், கடலூர்.