

‘மெல்லத் தமிழன் இனி’ தொடரில், கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய் குறித்து வெளியான கட்டுரை அதிர வைத்தது. மது அருந்தும்போது, அந்த நேரத்துக்கு கவலையை மறப்பதாகக் கூறிக்கொள்பவர்கள், மதுவின் கோர முகத்தைப் பார்த்தால் மதுக்கோப்பையைக் கையிலேயே தொடமாட்டார்கள்.
இத்தனை தீங்குகளைச் செய்யும் மதுவை என்ன காரணத்துக்காக நாம் அனுமதிக்கவேண்டும் என்றே புரியவில்லை. இதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும், குடும்பங்கள் சிதறுண்டு போவதும் தொடர்ந்து நடக்கிறதே. இதைத் தடுக்க நாம் என்ன செய்யப்போகிறோம்? தனி மனிதக் கட்டுப்பாடும், அரசின் கடுமையான நடவடிக்கைகளும்தான் இதற்கெல்லாம் தீர்வாக அமையமுடியும்.
- ஆர். பாலமுருகன்,மின்னஞ்சல் வழியாக…