

‘கொடைக்கானல் மலைச் சாலை நிலச்சரிவால் மூடப்பட்ட அவலம்’ என்கிற செய்தி, ‘இயற்கைக்குத் துரோகம் செய்யா தீர்கள், இயற்கை உங்களுக்குத் துரோகமிழைத்துவிடும்' என்பதையே மெய்ப்பிக்கிறது.
250 ஆண்டுகால ஆட்சியில், ஆங்கிலேயர்கள் ஆற்றிய பணி அளப்பரியது. 1844 -ம் ஆண்டு கொடைக்கானலைக் கண்டுபிடித்ததும் அதனை மக்கள் வாழ்விடமாகவும் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மறுவடிவம் கொடுத்து, போக்குவரத்து வழி ஏற்படுத்தி, அரசிடம் விட்டுச் சென்றிருக்கின்றனர். வனப் பாதுகாப்பில் தொய்வு, பராமரிப்பில் கவனம் செலுத்தாமைதான் இன்றைக்கு நூறாண்டு காலப் பழமைக்கு ‘கல்லறை' எழுப்ப வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதே நிலைமைதான் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கும். இனிமேலாவது பழமையைப் பாதுகாப்போம்.
- சந்திரா மனோகரன்,ஈரோடு.