

கருப்புப் பணம் பற்றிய செய்தியும் கணக்கில் வராத ஒரு லட்சம் கோடி ரூபாய் பற்றிய செய்தியும் அதிர்ச்சியடையவைத்தது. மத்திய அரசின் முயற்சியும் உச்ச நீதிமன்றத்தின் உத்வேகமும் பாராட்டுக்குரியதுதான் என்றாலும், இதில் அரசியல் பாகுபாடின்றி, உண்மை கண்டறியப்பட வேண்டும். எவ்விதத்திலும் இவ்வழக்கு இருட்டடிப்பு செய்யப்படாத வகையில் அதிநுட்பமான முறையில் கையாள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. இதன் மூலம் கருப்புப் பணம் பதுக்கல்பற்றிய பயம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்குள்ளும் எழ வேண்டும்.
- ம. பென்னியமின்,பரளியாறு.