

ஞாயிறு களம் பகுதியில் வந்த ‘பாட்டுப் புஸ்தகங்களின் வாசகன்’ கட்டுரை பல நினைவுகளைக் கிளறிச் சென்றது. சிறு வயதில் கண்ணதாசன், வாலி எழுதிய பாடல்களின் தொகுப்பை அப்பா சேகரித்து வைத்திருப்பார். வளரும் பருவத்தில், மோகன், மனோ எஸ்.பி.பி. பாடிய பாடல்களின் தொகுப்பை அண்ணன் வைத்திருப்பார். பள்ளியின் இடைவேளை நேரத்தில் தோழிகளோடு சேர்ந்து, பாட்டுப் புத்தகங்களை வைத்துப் பல போட்டிகளை எங்களுக்குள்ளே நடத்திக்கொள்வோம். ஓர் எழுத்து சொல்லி அதிலிருந்து தொடங்கும் பாடல்களைப் பாடுவோம். பாட்டுப் புத்தகத்தில் வரும் ரசித்த வரிகளை எழுதி தனியே வைத்துக்கொள்வோம். இன்று எல்லாம் மாறிவிட்டது.
எப்போதாவது கிராமத்துத் திருவிழாவுக்குச் செல்லும்போது அரிதாக பாட்டுப் புத்தகங்களைப் பார்க்கும்போது சின்ன ஃப்ளாஷ்பேக் வந்துபோவதைத் தவிர்க்க இயல்வில்லை.
- கோ. தேவி,ஜோலார்பேட்டை.