

இந்தியாவின் அதிகாரமிக்க புலனாய்வுத்துறை அமைப்பின் இயக்குநரே உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் ஆளாகியிருப்பது அதிர்ச்சி தருகிறது.
வழக்குகளை சி.பி.ஐ. நேர்மையாகவும் விரைவாகவும் விசாரித்து முடிக்கும் என்று மக்கள் கருதிவந்தனர். ஆனால் சமீப காலமாக ஆளும் மத்திய அரசின் கைப்பாவையாக சி.பி.ஐ. செயல்பட்டுவருவதாக வெளிவரும் தகவல்கள் அந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டன.
சி.பி.ஐ. நம்மைத் தீவிரமாகக் கண்காணிக்கும்; நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சம் சிறிதளவாவது அரசியல் தலைவர்களுக்கு இருந்திருந்தால் இப்படி கோடிக் கணக்கான ரூபாய்களுக்கு ஊழல்கள் நடந்திருக்காது.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.