

‘தி இந்து’ தீபாவளி மலர் கண்டேன். மிகச் சிறப்பான முறையில் சிரத்தை எடுத்து உருவாக்கியுள்ளீர்கள். இன்றைய 50 வயதினரின் அன்றைய ‘இரும்புக் கை மாயாவி’ பற்றிய செய்திகள் அருமை.
பழைய அரிய புகைப்படங்களை வெளியிடும்போது, அதில் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். ஒரு வேண்டுகோள், அடுத்த தீபாவளி மலரில் வளரும் இளம் பிரபலங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டால், அது அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்.
- மருத்துவர் கோ. ராஜேஷ் கோபால்,அருவங்காடு.