

குழந்தைகளின் மரணச் செய்தி மனதில் ரணத்தை உண்டாக்கியது. ஒவ்வொரு மாதமும் 45-60 சிசுக்கள் இறப்பதாகச் சொல்லப்படுவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. அனைத்து சிகிச்சைகளும் கிடைக்கும் என்று நம்பித்தான் எளியவர்கள் அங்கு வருகிறார்கள். ஆனால், அலைக்கழிப்பும் அலட்சியமும்தான் கிடைக்கிறது.
பதில் சொல்ல வேண்டிய அரசோ பூசி மெழுகுகிறது. கனவுகளோடு பெற்றெடுத்த குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டுப் பரிதவிக்கும் பெற்றோர்களுக்கு என்ன ஆறுதல் தரப்போகிறது? என்ன செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகுமா? மருத்துவத் துறையில் சேவை மனப்பான்மை குறைந்துவருகிறது என்பதையே இது காட்டுகிறது.
- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி