இப்படிக்கு இவர்கள்
உலக வங்கியின் தள்ளாட்டம்
கடந்த இரண்டு வருடங்களாக எந்தவொரு தொலைநோக்குத் திட்டங்களும் செயல்பாடுகளும் இல்லாமல் தள்ளாடும் உலக வங்கியின் நிலைமை மிகவும் வருத்தத்துக்குரியது.
உலக வங்கி செயல்பாட்டுரீதியாக வீழ்ந்துகொண்டிருப்பதுபற்றி கவலைகொள்ளாமல் இருக்கும் மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் எண்ணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. உலக வங்கியின் இருத்தலுக்கான காரணங்கள் முடிந்துவிட்டதாக மேற்கத்திய நாடுகள் நினைக்கும் இவ்வேளையில், இந்தியா போன்ற வளரும் நாடுகள், உலக வங்கியினை 21-ம் நூற்றாண்டு முன்னேற்றச் சவால்களுக்குத் தயார்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டியது அவசியம்.
- முனைவர் சீ. ஜானகிராமன்,கும்பகோணம்.
