அண்ணாவைப்போல்...

அண்ணாவைப்போல்...
Updated on
1 min read

‘எந்தப் பாடலைக் கேட்டாலும் அந்தக் காலத்துப் பாடல்போல் இல்லையே?’ என்று யுகபாரதியிடம் கேட்கப்பட்ட இதே கேள்வியை இளையராஜாவிடம் ஒருமுறை கேட்டார்கள்.

அப்போது இளையராஜா, ‘‘இன்னும் 20 வருடங்கள் கழித்து என் பாடல்களைக் கேளுங்கள். உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்கும்’’ என்று சொன்னாராம். யுகபாரதியும் அதே பதிலைத்தான் கூறியிருக்கிறார். பாடல்களில் அரசியலைச் சொன்னால் பாதிப்புகள் வரலாம். அரசியல் பாடல்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, தணிக்கைக் குழுவினரால் அப்பாடல் வெட்டப்படும். உதாரணமாக, ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ என்ற பாடலில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' என்ற வரிகள் இசைத்தட்டுகளில் இருக்கும்.

அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். தணிக்கையாளர்கள் ‘அண்ணா' என்ற பெயர் பாடலில் இருந்ததால், அந்தப் பாடலுக்கு அனுமதி மறுக்க, திரைப்படத்தில் மட்டும் ‘மேடையில் முழங்கு திருவிக' போல் என்று வரிகள் இடம்பெற்றன. அந்தப் பாடலை சென்னை வானொலி நிலையத்திலும் ஒலிபரப்பத் தடை இருந்தது என்பது இன்றைய தலைமுறை அறியாத செய்தி.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in