

பன்னாட்டு மருத்துவக் கொள்கைகளில் கொண்டு வரவேண்டிய சீர்திருத்தத்தின் அவசியத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது எபோலா நோய். இதுபோன்ற கொள்ளைநோய்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள நாடுகளில் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன. நிரந்தரமான அவசர கால நிதி அமைப்பையும், பயிற்சி பெற்ற மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுக்களை உலக சுகாதார நிறுவனம் ஏற்படுத்தி பரிதாபத்துக்குரிய அந்த நாடுகளை எபோலாவிடம் இருந்து காக்கவேண்டும்.
- முனைவர் சீ. ஜானகிராமன்,கும்பகோணம்