மத்திய அரசு என்றாலே...
‘தமிழகத்தை மதிக்காத தேசியத் தலைவர்களால் காங்கிரஸ் வீழ்ச்சி’ என முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். ராகவனின் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. அவரது கருத்து, தேசியம் பேசும் தென்னக அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, வடநாட்டு தேசியத் தலைவர்கள் அனைவரும் உடனடியாகச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. தேசியம் என்றால் அதாவது மத்திய அரசு என்றாலே அது வடநாட்டு உயர் சாதியினருக்கே உரியது என்ற நினைப்பு அந்தக் காலத்திலிருந்தே உள்ளது.
அதற்கு ஓர் உதாரணம்: ‘மொழிவழி மாகாணங்கள் பற்றிய குழு’. 1948-ல் மொழிவழி மாகாணங்களைப் பிரிப்பது தேவையா என்பதை ஆராய அமைக்கப்பட்ட குழு, தனது அறி்க்கையில் கீழ்க்கண்டவாறு கூறியது, ‘அப்படி ஏற்பட்டால் இந்தியாவுக்குத் தெற்கே தென்னாட்டுக்காரா்களி்ன் அரசும், இந்தியாவுக்கு வடக்கே சீக்கியா்கள் அல்லது ஜாட்டுகள் அரசும், ஏன் நாட்டின் சில பகுதிகளில் பிராமணா் அல்லாதவா்களின் அரசும்கூட ஏற்படக்கூடும்’ எனக் கூறி, மொழிவழி மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது என்று பரிந்துரை செய்தது. (அறிக்கை - பாரா 129) எனவே, நாடு பிரிவினையை நோக்கிச் சென்றால் அதற்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவா்கள் வடநாட்டு உயா் சாதி தேசியவாதிகளே.
- நடராஜன், மின்னஞ்சல் வழியாக…
