

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பிறந்தநாளைப் பொறுத்தவரை மாயாபஜாரில் இடம்பெற்ற ‘ஜாலியாய் தமிழில் பாடுவோம்’, ‘சுட்டிகளின் செல்லக் கவிஞர்’ எனக் கட்டுரைகளை வெளியிட்டு இரட்டை மரியாதை செய்துவிட்டது ‘தி இந்து’. சுந்தரக் கவிஞரின் ‘அம்மா இங்கே வா வா…’, ‘கை வீசம்மா கைவீசு…’, ‘மாம்பழமாம் மாம்பழம்…’, ‘தோசையம்மா தோசை…’ என அத்தனை பாடல்களும் நாங்கள் குழந்தையாக இருந்தபோது படித்துப் பெற்ற இன்பத்தை, இன்றைய குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போதும் நாங்கள் பெறுகிறோம். அழ. வள்ளியப்பாவின் முழுமையான வரலாற்றை அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
-ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.